எது எப்படி போனாலும், கையில் ஒரு போன் இருந்தால் போதும் என்று இருக்கும் சிறுவர்கள், இளைஞர்களே இப்போது அதிகம். பெரும்பாலும் டீன் ஏஜில் உள்ள சிறுவர், சிறுமியர்கள் செல்போன் கேம்களில் மூழ்கிவிடுவதும் இதற்குக் காரணம். அதிலும் துப்பாக்கிச்சண்டை, அடிதடி என்று இருக்கும் PubG விளையாட்டிற்கு பல சிறுவர்கள் அடிமையாகிக் கிடக்கின்றனர். அதன் உச்சம் தான் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம். பஞ்சாபைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி, அதில் சுமார் 16 லட்ச ரூபாய் வரை செலவிட்டுள்ளது வெளிவந்துள்ளது. தனது பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அவன் செலவிட்டுள்ளான் என்றும் தெரியவந்துள்ளது. பப்ஜி விளையாட்டில், பயனர் பிறரை தாக்க தனக்குத் தேவையான பொருட்கள், கத்தி, துப்பாக்கி என கருவிகளை பணம் செலுத்தி வாங்கி அதை கேமில் பயன்படுத்தி வெற்றி பெறமுடிதும். அப்படி தான் விளையாட்டில் ஜெயிக்க, இச்சிறுவனும் பணத்தை கன்னாப்பின்னாவென செலவிட்டுள்ளான்.
பப்ஜி விளையாட்டில், பயனர் பிறரை தாக்க தனக்குத் தேவையான பொருட்கள், கத்தி, துப்பாக்கி என கருவிகளை பணம் செலுத்தி வாங்கி அதை கேமில் பயன்படுத்தி வெற்றி பெறமுடிதும். அப்படி தான் விளையாட்டில் ஜெயிக்க, இச்சிறுவனும் பணத்தை கன்னாப்பின்னாவென செலவிட்டுள்ளான்.
மாதம் முடிந்து வங்கியில் இருந்து ஸ்டேட்மெண்ட் வரும்பொழுதுதான் சிறுவனின் பெற்றொருக்கு இது பற்றி தெரியவந்தது. வங்கியில் இருந்து அவ்வப்போது போனுக்கு வந்த செலவு மற்றும் பேலன்ஸ் மெசேஜ்களை அவன் டெலீட் செய்துள்ளான். அதோடு அவன் ஒரே வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் தனது அம்மா, அப்பா இருவரின் வங்கியில் இருந்து பணட்தை செலவிட்டுள்ளான்.
படிப்புக்கு என்று தனது அம்மாவின் போனை அவன் கடந்த சில மாதங்களாகவே பயன்படுத்தியதாகவும், அதை சரிவர பெற்றோர்கள் கவனிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. பணத்தை இழந்த பெற்றோர் மிகுந்த மனவேதனை அடைந்தனர். அதோடு அந்த பையனுக்கு பணத்தின் அருமையை புரியவைக்க, வீட்டு அருகில் இருந்த ஸ்கூட்டர் ரிப்பேர் கடையில் வேலை செய்ய அனுப்பிவிட்டார் அவனின் தந்தை.
பப்ஜி ஒரு வன்முறை நிறைந்த விளையாட்டு மட்டுமல்ல, அதனுள் வருபவர்களை செலவழிக்கவைக்கும் ஒரு யுக்தியும் அதில் அடங்கும். ஒருவரை அதில் அடிமையாக்கி, விளையாட்டில் முன்னேறிச் சென்று ஜெயிக்கவைக்க, பல பொருட்களை வாங்கவைப்பதால் இது இளம் வயதினர் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி, பணத்தையும் இழக்கவைக்கிறது. லாக்டவுனில் குழந்தைகள் வீட்டிலே முடங்கிக் கிடப்பதால், கையில் போனுடன் அதிக நேரம் இருந்தால், பெற்றோராகிய நாம் தான் கண்காணிப்புடன் இருக்கவேண்டும். அதே போல் அவர்களுக்கு கேம்களின் விளைவுகள் பற்றியும் சொல்வது கட்டாயம் ஆகும். கடந்த மாதம் பப்ஜி, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளத் என்பது குறிப்பிடத்தக்கது.