டிக்டாக் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்: இனி கவலை வேண்டாம் என்று கிளம்பிய தமிழக இளைஞர்கள்!

இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, சமீபத்தில் இந்தியாவில் சீனா பயன்பாடுகள் தடை செய்யப்பட்டது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக டிக்டாக் உட்பட 59 சீன ஆப்ககளை மத்திய அரசு அதிரடியாகத் தடை செய்தது. இது யாரைப் பாதித்ததோ இல்லையோ, ஆனால் டிக்டாக் பயனர்களை இந்த அதிரடி நடவடிக்கை பெரிதும் பாதித்தது. கவலையில் இருக்கும் டிக்டாக் பயனர்களுக்கு இந்த செய்து ஆறுதலாக இருக்கும்.
டிக்டாக் தடை பெரிய இடியாக இறங்கியது

டிக்டாக் தடை பெரிய இடியாக இறங்கியது

மத்திய அரசின் திடீர் நடவடிக்கையால், பல டிக்டாக் பயனர்கள் மற்றும் டிக்டாக்கை பொழுது போக்கு அம்சமாக பயன்படுத்தி வந்த ரசிகர்களுக்கு இந்த தடை பெரிய இடியாக இறங்கியது. பலரையும் இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது, இன்னும் சில டிக்டாக் நச்சத்திரங்கள் மாணவருத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் கூட இந்தியாவில் நடந்தேறியுள்ளது.
டிக்டாக் தடை நீக்கப்படுமா?

டிக்டாக் தடை நீக்கப்படுமா?

பல பில்லியன் பயனர்களைக் கொண்ட டிக்டாக் பயன்பாட்டில் உள்ள டிக்டாக் நட்சத்திரங்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக இவர்களின் பெரிய கவலையாகவே இருக்கிறது. சில நாட்களில் தடை நீக்கப்படும் என நம்பிக்கையோடு இருந்து வந்த டிக்டாக் பயனர்களுக்கு அது நடக்கும் என்பதில் நம்பிக்கை குறைந்துவிட்டது. இதனால் மாற்று ஆப் தேதி தங்களின் பயணத்தைத் துவங்கி வருகின்றனர்.
தமிழர்கள் உருவாக்கிய CHILL5

தமிழர்கள் உருவாக்கிய CHILL5

டிக்டாக் பயனர்களின் தேடுதலுக்கு விடையாக தமிழநாட்டை சேர்ந்த 5 இளைஞர்கள் டிக்டாக்கிற்கு நிகரான ஒரு புதிய பயன்பாட்டை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் CHILL5 என்ற பயன்பாட்டை மக்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கி அதை தற்பொழுது அனைவரின் பயன்பாட்டிற்காகவும் வெளியிட்டுள்ளனர். முழுக்க முழுக்க இது தமிழர்களால் உருவாக்கப்பட்டது, இந்தியர்களின் படைப்பு என்றும் கூறியுள்ளனர்.
ஆபாசத்தைத் தவிர்க்க வழி

ஆபாசத்தைத் தவிர்க்க வழி

இந்த CHILL5 பயன்பாடு முற்றிலுமாக டிக்டாக் போலவே பல வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிக்காட்டுதல்படி பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து தான் இந்த CHILL5 பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குறிப்பிட்ட ஆப்பில் ஆபாசத்தைத் தவிர்க்க சில அம்சங்களும் இருக்கிறதாம், ஆபாச வீடியோ என புகார் வந்தால், அந்த வீடியோவை ஆப் உடனே வெளியேற்றி விடுமாம்.
புதியது பழையவை