பயணிகள் நிழற்குடை அமைக்க கோரி மனு


இராதாபுரம் தாலுகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இருந்த பேருந்து நிறுத்தம் பயணிகள் நிழற்குடை பழுதடைந்து நீக்கப்பட்ட நிலையில் அகற்றப்பட்டது இதனால் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் காரியாகுளம், கணபதி நகரை சார்ந்த பொதுமக்கள் கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்கள் அந்த இடத்தில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் அவதி உற்று வருகின்றனர் எனவே அந்த இடத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் குட்டன், இராதாபுரம் தாலுகா தலைவர் உதயம் சுரேஷ், இராதாபுரம் தாலுகா குழு உறுப்பினர் ரமேஷ் தோழர் சுபா ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் மனு கொடுத்தனர்




மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை