ஊரக வேலை உறுதி திட்டப் பணிக்கு நீல நிற அட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் 10 நாட்கள் சிறப்பு முகாம் கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
நெல்லை, மார்ச் 1: நெல்லை மாவட்டத்தில் மார்ச் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அளவில் ஒரு முன்னோடி முயற்சியாகும். இது குறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 1,70 , 767 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக மாதம் 2வது செவ்வாய்கிழமை பிடிஓ அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை 2வது செவ்வாய்க்கிழமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அல்லது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் அனைத்து உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் இன்று (1ம் தேதி) முதல் 10ம் தேதி வரைமாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. எனவே, இம்முகாமை பயன்படுத்தி அவரவர் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன் பெறலாம்’’ என்றார்.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்