தனியார் அமைப்புகள் நடத்தும் கிரிக்கெட், கபடி போட்டிகளுக்கு போலீஸில் அனுமதி பெற வேண்டியதில்லை” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லேனாவிலக்கு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மயில்வாகனம் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: லேனாவிலக்கு அகதிகள் முகாமில் கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், தனியார் அமைப்புகள் சார்பில் கிரிக்கெட் ,கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்த போலீஸாரிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை. தனியார் அமைப்புகள் நடத்தும் விளையாட்டு போட்டியில் பிரச்சினை ஏற்பட்டு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டால் போலீஸார் தலையிடலாம் என உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்