இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழுவின் சார்பில், சமத்துவ பொங்கல் 15.01.2023 அன்று காலை 8 மணிக்கு இராதாபுரம் பேருந்து நிலையம் எதிரில் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வருடா வருடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் இராதாபுரம் பேருந்து நிலையம் முன்பு கொண்டாடப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா சார்பில் நம்ம இராதாபுரம் என்ற செல்ஃபி கார்னர் வைக்கப்பட்டு இருந்தது அது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
நிகழ்வுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இராதாபுரம் தாலுகா பொருளாளர் இசை முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் ராஜன், ரமேஷ் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். மாதர் சங்க தோழர். நாச்சியார் மற்றும் சமத்துவபுரம் ஜெயக்குமார் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்